தமிழர் தெய்வம் மணிமேகலையும் மணிபத்ராவும் (Post No.5079)

மணிபத்ரா

 

Written by London Swaminathan 

 

 

Date: 5 JUNE 2018

 

 

Time uploaded in London – 19-31

 

Post No. 5079

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

தமிழர்களின் ஐம்பெரும் காப்பியங்களில் தனித்து நிற்பது ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிலப்பதிகாரம் ஆகும்; அதன் தொடர்கதை மணிமேகலை என்னும் காப்பியத்தில் உள்ளதால் அவைகளை இரட்டைக் காப்பியங்கள் என்று அழைப்பர் தமிழர்.

யார் இந்த மணிமேகலை?

மாதவியின் மகளுக்கு மணிமேகலை என்று பெயர்; மாதவி , மணிமேகலை என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். மணிமேகலை என்பது கடல் வணிகரின் பாதுகாப்புத் தெய்வம் ஆகும். இந்த தெய்வம் தென் இந்திய வணிகர்களின் பெண் தெய்வம். வடக்கிலுள்ள வணிகர்கள் மணிபத்ரா என்ற யக்ஷனை இது போலப் பயணிகளின் தெய்வமாகக் கருதினர். 2300 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாதகக் கதைகளில் மணிபத்ரா, மணிமேகலை போன்ற தெய்வங்களின் கதைகள் வருகின்றன. புத்த மதத்தினர் ராமாயண, மஹாபாரத, பஞ்ச தந்திர, ஹிதோபதேச மற்றும் நாட்டுப்புற கதைகளை எல்லாம் புத்தர் பெயரில் ஏற்றி பௌத்த ஜாதகக் கதைகள் என்று பாலி மொழியில் எழுதி வைத்தனர். இதுவும் நன் மையில் முடிந்தது. ஸமுத்ர வாணிஜ (வணிகர்) கதை, மஹா ஜனக கதை முதலியன மூலம்  அக்கால கடல் வணிகத்தை நாம் அறிய முடிகிறது.

 

மஹா ஜனக ஜாதகத்தில் ஒரு உரையாடல் வருகிறது:–

 

மஹா ஜனகன் என்பவன் சென்ற கப்பல்  உடைந்து போய் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மூச்சு இளைக்க நீந்திக் கொண்டிருந்தான்.

அப்பொழுது மணிமேகாலா தேவி அவனைப் பார்த்தாள்; இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்:—

 

மணிமேகலை:-

யாரையா நீ? இந்தப் பரந்த பெருங்கடலில் பயனின்றி கைகளை அடித்துகொண்டு தப்பிக்கலாம் என்ற நப்பாசையுடன் போகிறாயே நீ யார்? யாரை நம்பி இப்படி உயிர் பிழைக்கலாமென்ற நம்பிக்கையுடன் போகிறாய்?

 

மஹா ஜனகன்:

ஓ, தேவதையே! எவன் ஒருவன் ஆனாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்வது அல்லவோ கடமை; எனக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரை தென் படவில்லை என்பது உண்மைதான்; ஆயினும் கரையை அடைய என் பயணத்தைத் தொடர்வேன்.

மணிமேகலை:-

கடலில் உன் தைரியத்தைக் காட்டுவதில் பயன் ஒன்றும் இல்லை, அன்பனே! கரையை அடைவதற்கு முன்பே நீ அழியப் போகிறாயே!

மஹா ஜனகன்:

 

ஓ கடவுளே! நீ இப்படிச் சொல்லலாமா? நான் அழிந்தாலும் கூட எனக்கு ஏற்படக்கூடிய அவப் பெயரை நான் தவிர்க்கலாமே. என்னைப் போல முயற்சி செய்பவன், பின்னர் வருத்தப்படுவதற்கு எதுவும் இராது.

 

மணிமேகலை:-

வெற்றி பெறாத முயற்சியில் என்ன பலன்? அதுவும் வெற்றி என்பது கண்ணுக்கு எட்டிய தொலைவில் காணவில்லையே! மரணம் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்ன பயன்?

மஹா ஜனகன்:

பார்! என் தோழர்கள் அனைவரும் மூழ்கி இறந்து விட்டனர்; ஆயினும் நான் மட்டும் நீந்துகிறேன் பார்; என் உடலில் சக்தி உள்ள வரை நான் நீந்துவேன். நான் கடலைக் கடக்க முயற்சி செய்வேன்.”

மணிமேகலையின் கோவில் காவேரி முகத்வாரத்தில் இருந்தது. குமரி முதல் கடாரம் வரை அவள் வணங்கப்பட்டாள்.

இந்த உரையாடலானது, அந்தக் கால மாலுமிகளின் நம்பிக்கையையும், விடா முயற்சியையும், நற் பெயர் எடுக்க வேண்டும் என்ற பேரவாவையும் காட்டுகிறது

 

வடக்கில் மணிபத்ரா என்ற யக்ஷ்னை இதே போல வணிகர்கள் வழிபடுவர். மதுரா முதலிய இடங்களில் அவாது சிலைகளும் கோவில்களும் இருந்தன. இப்பொழுது மிகப்பெரிய மணிபத்ரா சிலை மதுரா ஜில்லாவில் (உ.பி) இருக்கிறது. குவாலியர் பகுதியில் ஒரு காலத்தில் பெரிய அளவில் மணிபத்ரா வழிபாடு நடந்து வந்தது.

ஸமுத்ர வணிக ஜாதகத்தில் உள்ள ஒரு கதையும் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் பயணம் என்பது எவ்வளவு சர்வ சாதாரணமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.

இதோ அந்தக் கதை:

ஒரு நகரத்தில் தச்சர்கள் அனைவரும் சேர்ந்து மரச்சாமான்கள் செய்து விற்பதற்காக கடன் வாங்கினர். ஆனால் அவர்கள் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேறவில்லை; கடன் கொடுத்தவர்களோ நச்சரிக்கத் துவங்கினர். தச்சர்கள் அனைவரும் ஒரு திட்டம் போட்டனர்; நாம் எல்லோரும் ஒரு கப்பல் செய்வோம்; திரை கடல் ஓடித் திரவியம் கொணர்வோம் என்றனர். அந்த திட்டப்படியே ஒரு நாள் கப்பலில் புறப்பட்டனர். அவர்களுடைய அதிர்ஷ்டம் காற்றும் கடலும் அவர்களுக்கு உறுதுணையாக நின்றன.  ஒரு அழகான தீவுக்குச் சென்றனர். தென்னை மரங்களும் பழ மரங்களும் காய்த்துத் தொங்கின. அங்கு இவர்களுக்கு முன்னமே வேறு ஒருவன் உடைந்த கப்பலில் இருந்து அங்கு நீந்தி வந்து வசித்தான்; இவர்களைப் பார்த்தவுடன்

“ஆஹா, என்ன  ஆனந்தம்

உழைக்காமலேயே வாழும் இடம் இதுதான்.

நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள் இங்கு  வர வேண்டாம். எனது தாய்நாட்டைவிட இதுதான் இன்பம் தருகிறது”.

இந்தப் பாடல் கிரேக்க புலவன் ஹோமர் எழுதிய ஆடிஸி காவியத்தில் வரும் மாயா லோக மனிதர்கள் போல இருக்கிறது. அவர்கள் தேன் குடித்து உயிர் வாழ்ந்தனர்;  ஆடிஸியஸை அழைத்த போது அந்த சோம்பேறித் தனமான சுக போகம் வேண் டாம் என்றும் வீர தீரச் செயல் செய்யவே விருப்பம் என்றும் பதில் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான்.  அதை நினைவு படுத்துகிறது இந்த ஜாதக் கதை.

 

ஆகவே பழங்கால வணிகரின் வாழ்க்கையை அறிய இந்த ஜாதக் கதைகளும் ஏனைய நூல்களும் உதவுகின்றன; கடற்பயணம் என்பதும் கனவுலகம் போன்ற வெளிநாடுகளும் எல்லோரும் அறிந்த விஷய மாக இருந்தது.

-சுபம்–

உடலூனமுற்றோருக்கு உதவுக: தமிழ்ப் புலவர்கள் அறைகூவல்!

Post No. 2922
Date 27th June 2016
Written by london swaminathan
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெண்மணி போரில் காயமடைந்தோருக்கு உதவி செய்து
புகழ் பெற்றதை அறிவோம். மேலை நாடுகளில் இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு ‘ஹாஸ்பிஸ்’Hospice
என்ற அமைதியான தங்கும் இடங்கள் இருப்பதை அறிவோம். முதியோர் காப்பகங்கள் இப்போது பல்கிப் பெருகி வருகின்றன. ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தும் அறக்கொடை நிறுவனங்களும்
பெருகி வருகின்றன. ஆனால் இவையனைத்தையும் பாரத நாடுதான் முதல், முதலில் உலகிற்குக் கற்பித்தது என்பதற்கு அசோகனின் கல்வெட்டுகளும், மணிமேகலை முதலிய காப்பியங்களும்,
புராணக் கதைகளும் சான்றாகத் திகழ்கின்றன.
உடலூனம் அடைந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கண்பார்வையற்றோர், ஆதரவற்றோர் ஆகியோருக்காக
இன்று நிறைய அறக்கொடை நிறுவனங்கள் உதவி அளித்து வருகின்றன. அதே போல அரசாங்கமும் பல சலுகைகலை அறிவிக்கின்றன. ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இது பற்றி சிந்தித்து எழுதிவைத்திருப்பது வியப்பானது; மற்றும் தமிழர்களின் மனிதாபிமானத்துக்கும் இது ஒரு
எடுத்துக்காட்டு.

இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்போர் பின்ன்வரும் பாடல்களைப் படித்தாலே போதும்:–

காணார் கேளார் கால்முடமானார்
பேணுதலில்லார் பிணிநடுக்குற்றார்
யாவரும் வருக —
என்று அழைத்து மணிமேகலை உணவளித்ததை மணிமேகலை காப்பியம் மூலம் அறிகிறோம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – என்பது பாரத நாடு முழுதும் போற்றப்படும் கொள்கை.

இதோ இன்னும் ஒரு சான்று:–

புண்பட்டார் போற்றுவார் இல்லாதார் போகுயிரார்

கண்கெட்டார் காலிரண்டு இல்லாதார் – கண்பட்டாங்

காழ்ந்து நெகிழ்ந்தவர்க்கீந்தார் கடைபோக

வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து (சிறுபஞ்சமூலம்)

பொருள்:- போரில் காயம் அடைந்தவர்களுக்கும், காப்பாற்றுவார் இல்லாத அனாதைகளுக்கும், உயிர்போகும் தருவாயில் இருப்பவர்க்கும், கண் தெரியாதவர்களுக்கும், இரண்டு காலும்
இல்லாமல் முடமானோருக்கும், மனம் உருகி, நெகிழ்ந்து உதவி செய்தவர்கள்,  சாகும் வரைக்கும் கஷ்டம் இல்லாமல் இன்புற்று இருப்பார்கள் என்று சிறுபஞ்சமூலம்
சொல்லும்.

ஏலாதி என்னும் நூலிலும் ஒரு பாடல் வருகிறது:-

கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கால்

முடம்பட்டார் மூத்தார் மூப்பில்லார்க் – குடம்பட்

டுடையராயில்லுளு ணீத்துண்பார் மண்மேல்

படையராய் வாழ்வார் பயின்று (ஏலாதி)

பொருள்:– பெரும் கடனில் சிக்கித் தவிப்போருக்கும், பாதுகாப்பவர் இல்லாத குருடர்  முதலியோர்க்கும், எளியவர்களுக்கும், முடவர்க்கும் வாழ வழியற்ற முதியவவர்களுக்கும் அனாதைச் சிறுவர்களுக்கும் உதவுவோர் இந்த மண்ணுலகில் நால் வகைப் படைகளையுடைய
அரசர்கள் போல வாழ்வார்கள் என்று ஏலாதி கூறும்.

இறுதியாக அதே நூலில் இருந்த இன்னொறு பாடலையும் காண்போம்:–

தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி

வாயிழந்த வாழ்வினார் வாணிகம் — போயிழந்தார்

கைத்தூண் பொருள் இழந்தார் கண்ணிலவர்க்கீந்தார்

வைத்து வழங்கி வாழ்வார்

.

பொருள்:–
அனாதைப் பிள்ளைகட்கும், கணவனை இழந்து தவிக்கும் விதவையர்க்கும், ஊமைகளுக்கும், வியாபாரத்தில் முதல் முழுதையும் இழந்தோருக்குமுணவுப் பொருளை இழந்தவர்க்கும், குருடர்களுக்கும் உதவியவர்கள் பிற்காலத்துக்கு புண்ணியம் சேர்த்து
வைப்பவராவர். போகும் வழிக்குப் புண்ணியம் தேடியவர் ஆவர்

–சுபம்–

 

தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை

Inmates in Mumbai Prison

தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை

சமூக சேவை என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. தாதியர்/ நர்ஸ்கள் என்றால் உடனே ப்ளரன்ஸ் நைட்டிங்கேலை நினைக்கிறோம். குற்றம் புரிந்தோரை நல்ல மனிதர் ஆக்கியவர் என்றால் மணிமேகலையை நினைக்க வேண்டும். யார் அந்தப்பெண்மணீ?

சிறைச் சாலையில் சமூக சேவை செய்து கைதிகளைத் திருத்தி நற்குடி மக்களாக மாற்றும் புரட்சிகர கருத்தை முன்வைத்தவர் மணிமேகலை என்றால் மிகையாகா. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்த மதக் கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்டது மணிமேகலை. ‘’நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார’’த்துடன் இரட்டைக் காப்பியங்களகத் தொன்றியது இந்நூல். சீழ்தலைச் சாத்தனாரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த மணிமேகலையின் காவியத்தலைவி–,கதாநாயகி மணிமேகலை என்னும் இளம் பெண் ஆவார்.

மாதவியின் மகளாக அவதரித்துப் பேரெழிலுடன் விளங்கிய மணி, ஒரு கட்டத்தில் சிறைச் சாளைக்கு விஜயம் செய்து அங்குள்ள கைதிகளைச் சந்திக்கிறார். அமுதசுரபி என்னும் வற்றாத உணவளிக்கும் அற்புத பாத்திரம் மூலம் அங்குள்ள கைதிகளுக்கு அறுசுவை உணவு படைக்கிறார். வயிற்றுக்குச் சோறிட்டதோடு நில்லாமல் மனதுக்கும் ஆறுதல் தரும் அன்பு மொழிகளையும்  நல்ல வாழ்க்கை நடத்தத் தேவையான அறிவுரைகளையும் வழங்குகிறார். அற்புதம்! அனைவரும் மனம் மாற்றம் அடைந்துவிடுகின்றனர். இதை அறிந்த சோழ மன்னன் அவளை அரண்மனைக்கு அழைக்கிறார். சிறைக் கைதிகளை உடனே விடுவிக்கும் படியும் சிறச்சாலைகளை சாது சந்யாசிகள தங்கும் திரு மடங்களாக மாற்றவும் ஆலோசனை வழங்குகிறார். மன்னனும் அதை ஏற்று செயல் படுத்துகிறான்.

சிறைக் கைதிகள் சீர்திருத்தம் Prisoners rehabilitation என்பது மேலை நாட்டில் புதிதாகப் பின்பற்றப்படும் கருத்து. இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திக் காட்டியவர் மணிமேகலை!

பெரிய புராண, மஹா பாரத தண்ணீர் பந்தல் கதைகள்

12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி பற்றி வேதங்கள் முதல் திருவிளையாடல் புராணம் வரை பிரஸ்தாபிகின்றன. அத்தகைய காலங்களில் அக்ஷய பாத்திரம், அமுதசுரபி, காமதேனு, கற்பக விருக்ஷம், உலவாக்கிழி என்ற அற்புத கலயங்களும் சின்னங்களும் இந்திய மக்களைக் காப்பாற்றி வந்துள்ளன. இதை நம்பாதோரும் கூட கஷ்ட காலங்களில் மனிதர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை மலர்ந்த பூமி இப் புனித பாரதம் என்பதையாவது ஒப்புக் கொள்ளவேண்டும்.

பெரியபுராணத்தில் வரும் அப்பூதி அடிகள் கதையும் மஹாபாரதத்தில் வரும் சல்லியன் கதையும் நாம் அறிந்ததே. அப்பர் என்னும் திருநாவுக்கரசர் நால்வரில் ஒருவர். சம்பந்தராலும் போற்றப்பட்ட புனிதர். ஆனால் அந்தணர் அல்ல. அவர் திங்களுர் சென்றபோது அவர் பெயரில் திருமடங்களும் தண்ணிர் பந்தலகளும் இருந்ததைக் கண்டு வியந்தார். யார் என்று வினவியபோது அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் இவ்வாறு செய்ததை அறிந்தார். அவரிடமே சென்று ஏனைய்யா இப்படி அப்பர் பெயரை வைத்தீர்? அவர் என்ன சாதனை செய்து கிழித்துவிட்டார் என்று வினவ, அப்பூதி அடிகள் புலி எனச் சீறி அப்பர் தம் பெருமையை விளக்கி வந்தவரை விரட்டப் பார்த்தார். தாம்தான் அப்பர் என்று அவர் தம்மையே அறிமுகப் படுத்தியபோது அப்பூதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. நாம் இங்கே கவனிக்கவேண்டியது தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் 1300 ஆண்டுகளாக இன்றும் தமிழகத்தில் நீடித்திருக்கும் ஒரு சமூகப் பணி என்பதாகும்.

இதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மஹாபாரத காலத்தில் இப்படி ஒரு கதை வருவதைப் பார்த்தால் இமயம் முதல் குமரி வரை 5000 ஆண்டுகளாக இப்படி நற்பணி நடந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும். பாண்டவ சகோதரர் நகுலன் சகாதேவனின் மாமன் மாத்ர தேச அதிபதி சல்லியன். மாபாரத போருக்கு முன் இவனை தம் பக்கத்தில் இழுத்துக் கொள்ளவேண்டும் என்று பாண்டவர்களும் கவுரவர்களும் முனைப்புக் காட்டினர். கள்ளத்தனத்தில் கெட்டிக்காரன் துரியோதணன். சல்லியன் வரும் வழியில் தண்ணீர் பந்தல்கள் வைத்து அவன் தாக சாந்தி செய்யவே அவனிடம் உதவி கேட்டனர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரல்லவா? அவனும் அப்படியே உதவி தருவதாக வாக்களித்தான். கர்ணனின் தேரோட்டியாக அமர்ந்த சல்லியன், 18ஆம் நாளில் உயிர் துறக்கிறான். வாக்கிற்குக் கட்டுப்பட்ட சத்திய சீலன்!

ஆக தண்ணிர் பந்தல், அன்ன தானம் என்பன பாரதீய வாழ்வில் இரண்டறக் கலந்த அம்சங்கள். வட இந்தியாவில் காளி கம்பளவாலா சத்திரங்கள் என்று வழி நெடுகிலும் உண்டு. அந்தக் காலத்தில் இமய மலையின் புனிததலங்களுக்குச் செல்லுவோருக்கு கம்பளி ஆடைகளை கொடுத்துதவிய ஒரு தர்மாத்மாவின் பெயரில் அமைந்த சத்திரங்கள் அவை. நம் தமிழ் நாட்டிலும் வழி நெடுகிலும் அன்ன சத்திரங்கள் இருந்த காலம் ஒன்று உண்டு.

எறும்புக்கும் கொசுவுக்கும் கூடத் தீங்கு செய்யாத சமண சமயத்தினர் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் மருத்துவ மனை நடத்திய நாடு இது!

Prisoners in Amritsar Women’s Prison

சிறுகுடிக் கிழான் பண்ணன்

பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் நிலம் தானம் கொடுத்த ஆயிரக் கணக்கான கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் உள்ளன. புலவர்களுக்கு பொற்காசுகளையும் உணவையும் கொடுத்த சங்க கால மன்னர்களையும் வள்ளல்களையும் நாம் அறிவோம். இவை சமூக சேவை ஆகா. பலனை எதிர்பார்த்தோ, துதி பாடலை எதிர்பார்த்தோ செய்யப்பட்ட உதவி இவை. ஆயினும் ஜாதி மதம் இனம் , குலம் கோத்திரம் என்று பாராது உணவு படைதோரும் உண்டு. சோழமன்னன் கிள்ளிவளவனும் போற்றிய ஒரு வள்ளல் சிறுகுடிக் கிழான் பண்ணன். புறநானூறு 173ஆம் செய்யுளில் எறும்பு முட்டை கொண்டு சாரை சாரையாக செல்லுவது போல பண்ணன் வீட்டை நோக்கிமக்கள் செல்லுவதைப் படித்து இன்புறலாம்.

விருந்தோம்பல், தேவதானம், புலவரை ஆதரித்தல் என்பது வேறு. சமூக சேவை என்பது வேறு. தண்ணீர் பந்தல் கதைகளும் மணிமேகலை சிறைச் சாலைச் சேவைகளும் தனி ரகம். பாரதத்தின் வழி தனி வழி. எல்லோருக்கும் முன் உதாரணமாகத் திகழும் தனி வழி!

Contact swami_48@yahoo.com

இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்

(This article is available in English as well in my blogs: INDRA FESTIVAL IN THE VEDAS AND TAMIL EPICS: swami.)

தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ஆனால் இதன் தோற்றம் வேதத்திலும் ராமாயண, மஹா பாரத இதிஹசங்களிலும் உள்ளது. இன்றும் நேபாள நாட்டில் பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

தமிழ் உலகம் செய்த தவப் பயனால் கிடைக்கப்பெற்ற பழந்தமிழ் நூல் “ஒல்காப் புகழ் தொல்காப்பியன்” எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கணப் பனுவல் ஆகும். அதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. அதை எழுதியவர் த்ருணதூமாகினி என்னும் தொல்காப்பியன் ஆவார். இது “உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” தரும் தகவல். அதை ஒப்புக் கொள்ளாதோரும் “நான்மறை முற்றிய” அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியதாக பனம்பாரனார் கூறியதை மறுக்கவில்லை. அதாவது தமிழ்நாட்டில் வேதங்களில் கரைகண்ட ஒரு பார்ப்பனன் இருந்தார், அவர்தான் தொல்காப்பியத்துக்கு நற்சான்றிதழ் வழங்கினார் என்பதை “தமிழ் கூறு நல்லுலகம்” ஒப்புக் கொள்கிறது.

வேதத்தில் இந்திர விழா

டாங்கே, மெயர் போன்ற வேத நூல் அறிஞர்கள் இந்திரவிழா பற்றிய குறிப்பு உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும், அதர்வ வேத்திலும் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திர த்வஜம் (இந்திரன் கொடி) பற்றி அதர்வ வேதம் பேசுகிறது. ரிக் வேதத்தில் மறை மொழியில் இதே விஷயம் உள்ளது. “மருத்துக்கு முன் இந்திரன் நடுங்கியதாக” ஒரு இடத்தில் வருகிறது. இதன் பொருள்—காற்றில் இந்திரன் கொடி படபடத்தது என்பதாகும். மருத் என்பது காற்றுக் கடவுள். அதிலிருந்தே அனுமனைக் குறிக்கும் மாருதி என்ற சொல் வந்தது. ரிக் வேதத்தில் இன்னும் ஒரு இடத்தில் , “ஏ இந்திரனே உன்னை புரோகிதர்கள் உயரே ஏற்றிவிட்டார்கள்” என்ற வரிகள் வருகின்றன. இது இந்திரன் கொடி ஏற்றப்பட்டுவிட்டது என்பதாகும்.

இந்திர விழா தோற்றம்

இந்திரன் விழாவில் முக்கிய அம்சம் கொடி ஏற்றம். அதற்கு முன் வள்ளுவன் பறை அறிவிப்பான். உடனே ஊர் முழுதும் அலங்கரிக்கப்படும். 28 நாட்களுக்கு நாடே விழாக்கோலம் பூணும். ஆடலும் பாடலும் புத்துயிர் பெறும். அதைக் கொண்டாடாவிடில் இயற்கையின் கோபத்துக்கு நாடு உள்ளகும். இறுதி நாளில் இந்திரன் கொடிக்கம்பம் வீழ்த்தப்படும். மணி மேகலையும் சிலப்பதிகாரமும் இது பற்றி நிறைய தகவல் தருகின்றன.

இதை அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் துவக்கியதாக இரட்டைக் காப்பியங்கள் கூறும். ஆனால் உபரிசார வசு துவக்கியதாக மகா பாரதம் கூறும். செம்பியன் என்ற சொல்லே சிபிச் சக்ரவர்த்தியின் பெயரிலிருந்து வந்ததுதான். சிபியின் கதை சங்க இலக்கியத்தில், சிலப்பதிகாரத்தில் மற்றும் பல வட மொழி நூல்களில் இடம் பெற்றுள்ளது சோழ்ர்கள் கல்வெட்டுகளில் தங்கள் முன்னோர்கள் வடமேற்கு இந்தியாவை ஆண்டதாகக் கூறுவர். (சிபி= சைப்ய=செம்பிய)

உபரிசார வசு இந்திரனிடம் வாடாத் தாமரை மாலையும் ஒரு விமானத்தையும் பெற்ற பேரரசன். இந்தியாவின் பழங்கால எஞஜினீயர்களில் சிறப்பானவன். ஒரு மலையை உடைத்து புதிய நதியை உருவாக்கியவன். (வேத காலத்தின் முதல் எஞ்ஜினீயர் இந்திரன். அவன் மலையை உடைத்து விருத்திரனை, நமுசியை விழுத்தாட்டிய செய்திகளை வேதங்கள் பாடுகின்றன. இவைகள் மாபெரும் பொறி இயல் செய்திகள். என்னுடைய GREAT ENGINEERS OF ANCIENT INDIA ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க).

உபரிசார வசுவின் மனைவி பெயர் கிரிகா. அவளுடன் படுத்து சுகம் அனுபவிப்பதற்குள் அவனை அவசரமாகக் காட்டில் வேட்டை ஆட அனுப்பினர். அங்கே மனைவியை நினைக்கவே விந்து வெளியாகி, அதை  ஒரு மீன் உண்ண, மத்ச்யா (சத்யவதி) பிறந்தாள். அவனுடைய குழந்தைகள் மூலம் இந்தியாவின் பழைய வம்சாவளிகள் தோன்றின என்பது மகாபாரதம் கூறும் செய்தி. (மீன்,  மனித விந்துவை சாப்பிட மனிதர்கள் பிறக்கும் என்பது எல்லாம் மறை மொழிகள். இதனுடைய சரியான பொருளை வேறு ஒரு கட்டுரையில் தருவேன்). இந்த உபரிசார வசுதான் இந்திர விழாவைத் துவக்கினார்.

சோழன் துவக்கியதும், உபரிசார வசு துவக்கியதும் சரியான தகவல்தான். ஒருவர் வட இந்தியாவிலும் ஒருவர் தென் இந்தியாவிலும் துவக்கினர் என்பது சாலப்பொருத்தமே.

ராமாயணத்தில் வால்மீகி முனிவர் நேரடியாக எந்தத் தகவலையும் தராமல் “அவன் இந்திரன் கொடிக் கம்பம் போல வீழ்ந்தான், சாய்ந்தான்” என்ற உவமையைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார்.

Picture: Indra in Nepal

தமிழனும் இந்திரனும்

தமிழில் மிகப் பழைய நூல் தொல்காப்பியம் என்பது எல்லோரும் ஒப்புக்கொண்ட உண்மை. அதில் தொல்காப்பியர், வேதங்கள் கூறும் கடவுள்களே தமிழர் கடவுள் என்று உறுதிபடக் கூறுகிறார். இந்திரன், வருணன், விஷ்ணு, ஸ்கந்தன் (முருகன்) ஆகிய நால்வரே தமிழ்க் கடவுள்கள். சிவன் அந்தப் பட்டியலில் இல்லை. உண்மையில் சிவன் என்ற சொல்லை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் நாயன்மார்கள தான். ஆனால் சிவ பெருமானைக் குறிக்கும் ஏனைய சொற்கள் சங்கத் தமிழில் உண்டு.

இந்திரன் இடம்பெறாத தமிழ் நூல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். புறநானூற்றில் உண்டு. திருக்குறளில் உண்டு. ஐங்குறு நூற்றிலும் இருக்கிறது. தேவலோக அமிழ்தம், நிறைய இடங்களில் வருகிறது.

மிகவும் வியப்பான விஷயம்! பாபிலோனிய ஜில்காமேஷ் போன்றோர் உலக மியுசியங்களில் ஒளிந்து கொண்டுவிட்டனர். ஆனால் இந்திரனையோ இன்றும் பிராமணர்கள் முக்கால சந்தியாவந்தனத்தில் தினமும் வழிபடுகின்றனர். உலகம் முழுதும் உள்ள இந்துக் கோவில்களில் தினசரி பூஜைகளில் இந்திரனும் வருணனும் வழிபடப்படுகின்றனர். இந்திரன் பெயர் இல்லாத இனம் இந்தியாவில் எங்குமே இல்லை. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் முதல் தமிழ்நாட்டின் நாகேந்திரன், கண்ணாயிரம் வரை எல்லாம் இந்திரன் பெயர்கள்தான்.

இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.

 

நேபாளத்தில் இந்திர விழா

இன்றுவரை இந்திர விழாவை  பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.

தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மாவில் ஏப்ரல் மாத புத்தாண்டு தினத்தில் நடைபெறும் நீர் விழாவும், இன்று இந்தியா முழுதும் நடை பெறும் ரக்ஷா பந்தனும் (கையில் சகோதரிகள் கட்டிவிடும் காப்பு) இந்திரன் தொடர்புடைய விழக்களே.

பொங்கலுக்கு முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் போகிப் பண்டிகை இந்திர விழாவின் ஒரு பகுதியே. போகி என்பது இந்திரனின் பெயர்களில் ஒன்று.

Elephant Dance in Indra Viza in Nepal

கண்ணன்—- இந்திரன் “மோதல்”

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சில “அதிமேதாவிகள்” உண்டு. இந்திய மக்களையும் நாட்டையும் பிளவுபடுத்த ஏதேனும் ஆரிய மாயை ,திராவிட மாயை கிடைக்காதா என்று கண்ணில் விளக்கெண்ணயை ஊற்றிக் கொண்டு தேடுவார்கள். வெறும் வாயை மெல்லும் இந்த பரிதாப கேசுகளுக்கு அவல் கிடைதது போல பாகவதத்தில் ஒரு செய்தி வருகிறது. இந்திரன் விழாவை கண்ணன் நிறுத்தி தனக்கும் பாதி பங்கு கேட்டான் என்று. இதனால் இந்திரன் கோபம் கொண்டு பேய் மழை பெய்யச் செய்யவே கண்ணன் கோவர்த்தன மலையைத்தூக்கி தனது மக்களைக் காப்பாற்றினான் என்று. பாகவதத்தையே நம்பாதப் பரிதாபக் கேசுகள், கண்ணனின் பகவத் கீதையையே நம்பாதப் பரிதாபக் கேசுகள் இதை மட்டும் பிடித்துக் கொண்டு புது தியரிகள் எழுதி பி எச். டி வாங்கவும் முயலுவர்.

உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டைப் போலவே கிருஷ்ண பூமியிலும் இந்திர விழா நடைபெற்றது. சோழ மன்னன் அதை நிறுத்தியதால் காவிரிப் பூம்பட்டிணத்தைக் கடல் கொண்டது என்று மணிமேகலை கூறுகிறது. ஆக இந்திர விழாவை நிறுத்தினால் இயற்கைச் சீற்றம் ஏற்படும் என்பதை வட ,தென் இந்தியர்கள் ஒப்புக்கொண்டனர் என்பதே உண்மை.

தொல்காப்பியர் குறிப்பிட்ட இந்திர வழிபாட்டை,, வேதங்கள் குறிப்பிட்ட இந்திர வழிபாட்டை இன்றுவரை தமிழ் பிராமணர்கள் மற்றும் தமிழ் நாட்டுக் கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் பின்பற்றிவருவது 3500 ஆண்டுக்கும் மேற்பட்ட பாரம்பர்யத்தின் தொடர்ச்சி என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது.

 

நிவேதிதாவும் இந்திரன் கொடியும்

 

இன்னொரு வெப்சைட்டில் படித்த ஒரு வியப்பான விஷயம் விவேகானந்தரரின் சிஷ்யைகளில் ஒருவர் உருவாக்கிய இந்திரன் கொடியாகும். அவர் பெயர் மர்கரெட் நோபிள். ஐரிஷ்காரியான அப்பெண் நிவேதிதா என்று பெயர்தாங்கி புகழ்பெற்றார். இந்துக்களுக்கான ஒரு கொடியை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டபோது அவர் இந்திரனின் வஜ்ராயுதத்தைப் பொறித்து வங்காளி மொழியில் வந்தே மாதரம் (தாயை வணங்குவோம்) என்று எழுதிய கொடியை உருவாக்கினார். தமிழர்கள், நேபாளியர்கள் போல வங்காளிகளும் இந்திர விழா கொண்டாடுவர். இன்றும் கூட தென் கிழக்காசிய நாடுகளில் இந்திரனின் ஐராவதம் ( 3 அல்லது 4 தலை யானை ) கொடியிலோ, அரசாங்க சின்னங்களிலோ இடம்பெற்றிருக்கிறது. இந்திரனின் சிலைகள் இல்லாத மியூசியமே இல்லை என்றும் சொல்லலாம்.

வாழ்க இந்திரன் புகழ். வளர்க இந்து மதம்.

குறிப்புகள் வேண்டுவோருக்கு:

Silappadikaram  (5: 141-4) and Manimekalai (1:27-72, 2:1-3, 1:1-9, 24: 62-69, 25: 175-200). (Pura Nanuru 182 and 241, Ainkuru. 62, Tirumurugu. 155-59 ) and Amruta (ambrosia of Indraloka) in a lot of places.

In the Rig Veda it is said that Indra shook in the company of his followers. His companions Maruts were the wind god. Vedas also say, “ priests have raised you up on the high, O, Satakratu like a pole” (RV 1.X.1). Vedic poets used symbolic language to convey the message that the Indra flag was hoisted and it was fluttering in the wind. Meyer gives more evidence from Atharva Veda

*******

 

சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி

(Questions are imaginary, Answers are from Manimekalai)

மணிமேகலை காப்பியம் படைத்த புலவரே, பசி வந்திட மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமுறுதல் ஆகிய பத்தும் பறந்துபோகும் என்று அவ்வையார் கூறுகிறாரே!

குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;

பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;

நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்;

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)

 

அட,உங்கள் கருத்தும் அதுதானா ! சோழ மன்னன் காந்தமன் வேண்டியதால் அகத்தியர் தனது தண்ணீர் கலசத்தைக் கவிழ்க்கவும் காவிரி உற்பத்தியானதாமே!

கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட

அமர முனிவன் அகத்தியன் தனாது

கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை (மணி. பதிகம் 11-10)

காவிரி நதி ஜீவ நதியா?

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை

 

அறம் அல்லது தர்மம் என்றால் என்ன, புலவரே?

அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்

மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல் (மணி 25-228)

 

Food, Shelter and clothing are three essential things என்று இன்று எல்லோரும் சொல்லுவதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன பேரறிஞரே, பரசுராமனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று காந்தன் என்னும் சோழனை அகத்தியர் ஒளிந்துகொள்ளச் சொன்னாரா?

மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்

தன் முன் தோன்றற்காதொளி நீ யெனக்

கன்னி ஏவலிற் காந்த மன்னவன்

அமர முனிவன் அகத்தியன் ரனாது

துயர் நீங்கு கிளவியின் யாறேன் றறவும் 11-25

 

உங்கள் காலத்தில் யவனர்களும் தமிழர்களுடன் வேலை செய்தார்களா?

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்

அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்

தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி

 

செல்வத்தின் பயனே ஈதல் என்று புலவர்கள் கூறுகின்றனரே? அதிலும் தானத்தில் சிறந்தது அன்ன தானமா?

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

 

அருமையான வாசகம். சரியான அரசன் இல்லாவிடில் நாட்டில் என்ன நடக்கும்?

கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்

கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்

மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை

மன் உயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்

தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்

தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த

அவத்திறம் ஒழிக (மணி 7-8)

 

தொல்காப்பியர் ஆறு அறிவு படைத்த மனிதன் பற்றிக் கூறுகிறார். நீங்களும் உயிர்களை ஆறு வகையாகப் பிரித்திருக்கிறீர்களா?

பல்லுயிர் அறுவகைத் தாகும்

மக்களும் தேவரும் நரகரும் பிரமரும்

தொக்க விலங்கும் பேயுமென்றே (30-56)

கோவலன் கொலையுண்டவுடன் மாதவியை அறவண அடிகள் எப்படித் தேற்றினார்?

 

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்

பற்றின் உறுவது முன்னது பின்னது

அற்றோர் உறுவது அறிக (2-64)

 

அகத்திய முனிவன் வேண்டியதால் சோழ மன்னன் 28 நாள் இந்திர விழாவை பூம்புகாரில் ஏற்பாடு செய்தது உண்மைதானா?

ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்

தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்

விண்ணகர் தலைவனை வணங்கி முன்னின்று

மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள்

மேலோர் விழைய விழாக் கோளெடுத்த

நாலேழ் நாளினும் நீன்கனி துறைகே

அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது (மணி 1.11-39

 

அமுத சுரபி என்னும் அற்புத கலசத்தால் ஏழை எளியவர்களுக்கு உணவளித்த மணிமேகலை யார் யாருக்கு உணவு கொடுத்தாள்?

காணார், கேளார், கால் முடப் பட்டோர்

பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்

யாவரும் வருக என்று இசைத்துடன் ஊட்டி (மணி 13-111)

 

அற்புதம், அற்புதம் ! 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சமூக சேவை என்ன என்பதை தமிழன் தான் உலகுக்கே கற்பித்தான் போலும்!